Ad Code

Responsive Advertisement

கற்றல் இடர்பாடுடைய பிள்ளைகள்

 கற்றல் இடர்பாடுடைய  பிள்ளைகளுக்காக ஒருமுறை இதை வாசிப்போம்.

எங்களை நம்பி வந்த அவர்களை நினைவில் இருத்திக் கொண்டு...

எந்தப் பாடமும் மொழி வழியாகவே கற்பிக்கப்படுகிறது. அதனால் மொழித்திறன்களில் பயிற்சி இல்லாத பிள்ளையால், மற்றைய பாடங்களை விளங்கிக் கொள்ள சிரமப்படும். கற்றல் இடர்பாடு என்பது ஒருவரின் அடிப்படையான உளவியல் செயல் முறையின் ஒழுங்கு குலைவினால்  ஏற்படும் ஒரு பரிமாணம். 

எழுத்துக்களைப் படித்து அதன்  ஒலி மற்றும் வரி வடிவத்தை இணைத்து, உள்வாங்கி  மனதில் பதிய வைத்துக்கொள்ளும் ஆற்றல் குறைவாக இருக்கும். கணிதம்,  கணக்கீடுகள் போன்றவற்றிலும் விஞ்ஞான விளக்கங்களையும் உள்ளார்ந்த கருத்துக்களையும்  உள்வாங்கி வெளிப்படுத்தவும் சிரமப்படுவார்கள்.  அப்பிள்ளைகளை முறையான பயிற்சி தருவதன் மூலம் அவர்களை மற்றவர்கள் போல் செயல்பட வைக்க முடியும். 

அவர்களும் எல்லோரையும் போலவே புத்திசாலி. எனினும் அவர்களின் மூளையின் செயலாற்றல் வித்தியாசமானது. இந்த வேறுபாடு அவர்களது புலனுணர்வுகளின் வழியாகத் தகவல்களைப் பெற்றுப் புலக்காட்சி விளக்கத்தின்  ஊடாக எண்ணக்கருவாக்கம் பெறும் செயல் முறையை பாதிக்கிறது.

இவர்களின் பண்புகளாக, 

 1. மெதுவான வாசிப்பு விகிதம்

2. புரிந்து கொள்வதில் சிக்கல் 

3. எழுத்துக்களில் குழப்பம் 

4. குறைந்த ஞாபகம் 

5. அடிக்கடி எழுத்துப்பிழைகள் 

6. மெதுவான எழுத்து விகிதம் 

7. எழுத்துக்களை , கணித குறியீடுகளை மாற்றி எழுதல்

8. மிகப்பெரிய கையெழுத்து

9. கணித உண்மைகளை.    

10.  ஒழுங்குபடுத்துதல் குறைவு

11.  திசைகள் நேரங்களை பின்பற்ற கடினம் 

12.பொருட்களை நினைவு படுத்த கடினம்

13. வயதுக்கு பொருத்தமான சொற்களஞ்சியம் இல்லாமை


கற்றல் இடர்பாட்டுக்கான  காரணங்களாக ,

1 - மூளையில் ஏற்படும் பாதிப்பு  அல்லது தொழிற்படா நிலை

2 - பரம்பரை அல்லது பாரம்பரியம் 

3 - உயிர் இரசாயன சமநிலையின்மை

4 - சுற்றாடல் காரணிகள் 

   இவ்வகைகளில் இன்னும் பலவற்றை உள்ளடக்கி கூறலாம்.


வகுப்பறைகளில்  இவர்களை கையாள்வதற்கான சில வழிமுறைகள் ,

1. இப்பிள்ளைகளோடு நெருக்கமாக இருந்து பணியாற்றுதல்

2. இவர்கள் மீது விசேட கவனம் 

3. "என்னால் முடியும் " என்ற நம்பிக்கையை ஏற்படுத்தல். 

4.இவர்களுக்காக தனிப்பட்ட உள்ளடக்கம் , அமைப்பு,  மதிப்பிடல் உத்திகளை கையாளல்.

5. உற்சாகப்படுத்தி பாராட்டி பரிசில் வழங்கி ஊக்கப்படுத்தல்

6. பாடங்களுக்கு போகும் போது இவர்களுக்கு  இலகுவான கேள்விகளை தயாராக கொண்டு செல்லல். 

7. மாணவர்களின் குடும்ப பின்னணி,  வீட்டு நிலைமையையும், சமூக சூழலையும் அறிந்து செயற்படவும். 

8. இம்மாணவர்கள் பற்றிய விசேட நிபுணத்துவம் வாய்ந்தவர்களிடம் வழிப்படுத்தவும்.         

இவ்வாறான இன்னும் பல உத்திகளை கையாண்டு கற்றலில் இடர்படும் பிள்ளைகளை கரையேற்ற உதவுவோம்.


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement