Ad Code

Responsive Advertisement

அறிக்கை

அறிக்கை

பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிக்கை எழுத வேண்டிய தேவை ஏற்படுகின்றது. அறிக்கை என்பது குறிப்பிட்ட விடயம் தொடர்பான தகவல்கள்இ தரவுகள்இ குறிப்புக்கள்இ கருத்துக்கள் என்பவற்றைத் திரட்டி ஆதாரபூர்வமாக எழுதப்படும் ஆவணம் ஆகும்.

நடைபெற்று முடிந்த நிகழ்வுகளுக்கு அறிக்கை எழுதப்படுவது போலஇ நடைபெறத் திட்டமிடப்படும் விடயங்களுக்காகவும் அறிக்கை எழுதப்படலாம். இவ்வறிக்கைகள் உண்மையாகவும்இ ஏற்புடையதாகவும் அமைய வேண்டும். அறிக்கை பல வகைகளில் அமையும்இ அவ்வவ் வகைகளுக்கேற்ப அறிக்கை எழுதும் முறைமையும் மாறுபடும்.

அறிக்கையின் வகைகள்

1. கூட்ட அறிக்கைகள்

     அ. நிர்வாகக்கூட்ட அறிக்கை.

     ஆ. பொதுக்கூட்ட அறிக்கை. இ. சென்ற கூட்ட அறிக்கை.

2. ஆண்டறிக்கைகள்

3. வெளிக்கள அறிக்கைகள்

4. திட்டமிடல் சுற்றறிக்கைகள்

5. செய்தி அறிக்கைகள்

     அ. வானொலி செய்தி அறிக்கை.

     ஆ. தொலைக்காட்சி அறிக்கை.

      இ. பத்திரிகைச் செய்தி அறிக்கை.


அறிக்கை எழுதும் படிமுறைகள்

1. தகவல் திரட்டுதல் -வாசித்தல் - உசாவுதல்இ செவிமடுத்தல்இ செவ்வி காணல்இ அவதானித்தல் போன்ற முறைகளில் தகவல் திரட்டலாம். (இச்சந்தர்ப்பங்களில் குறிப்பெடுத்தலை கட்டாயம் செய்தல் வேண்டும்)

2. தகவல்களை நிரற்படுத்தல் - முக்கிய அம்சங்களைத் தேர்ந்தெடுத்தல். 

3. அவற்றை ஒழுங்குபடுத்தி மறுபரிசீலனை செய்தல்.

4. அறிக்கை எழுதும் நோக்கத்திற்கேற்ப அவற்றைப் பந்தி பிரித்து வேண்டியவிடத்து உப தலைப்பு இடல்.

5. சுருக்கமாகஇ ஆனால் தெளிவாக தர்க்க ரீதியாக எழுதுதல்.

6. இறுதியில் வேண்டியவிடத்து தீர்வினைக் காட்டல்.


அறிக்கை எழுதும் சில சந்தர்ப்பங்கள்

1. மன்றங்களில் வாசிக்கப்படும் கடந்த கூட்ட அறிக்கை. 

2. பாடசாலை, சனசமூக நிறுவனங்களின் ஆண்டு அறிக்கை.

3. செயற்றிட்டம், நிகழ்வு, நிகழ்ச்சி பற்றி சமர்ப்பிக்கப்படும் விஷேட அறிக்கை.

4. பிரச்சினைகள்இ சூழ்நிலைகள்இ எதிர்பாராத சம்பவங்கள் பற்றி ஆராய்ந்து சமர்ப்பிக்கப்படும் அறிக்கை.

5. அரச திணைக்களங்கள்இ கூட்டுத்தாபனங்கள் போன்றவற்றின் கருமக்கூற்றுகள் பற்றித் திணைக்களத் தலைவருக்குச் சமர்ப்பிக்கப்படும் முன்னேற்ற அறிக்கை.

அறிக்கை எழுதுவதனால் ஏற்படும் நன்மைகள்

1. கடந்த நிகழ்ச்சிகளைத் தொடர்பு படுத்துதலுக்காக அறியத் தருதல். 

2. குறிப்பிட்ட ஆண்டொன்றில் குறித்த நிறுவனமொன்று பெற்ற வளர்ச்சியை அறிதல்.

3. குறிப்பிட்ட ஆண்டொன்றில் குறித்த நிறுவனமொன்று நிலைநாட்டிய சாதனையைத் தெரியப்படுத்துதல்.

4.செயற்றிட்டம் ஒன்று எவ்வாறுஇ எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டது என்பதை அறிதல். 

5.பிரச்சினைகள்இ சம்பவங்கள் பற்றிய காரணங்களை அறிதல்.

6. தரவுகளை இனங்காணல்.

7. எதிர்கால செயற்பாடுகளை துல்லியமாகத் திட்டமிடல்.


அறிக்கைச் சட்டகம்

1.தலைப்பு

2. அறிமுகம்

3. இடம், காலம், நேரம்.

4. பிரதம விருந்தினர்

5.ஆரம்பம்

6. வரவேற்புரை

7. அதிபர் உரை - விருந்தினர் வரவேற்பு

8. நிகழ்வு /விடயம்

9. பிரதம அதிதியின் உரை

10.நன்றியுரை:

11.நிறைவு:


மாதிரி அறிக்கை

தலைப்பு :- சது/ செந்நெல் ஸாஹிறா மகா வித்தியாலயத்தின் கலை விழா அறிக்கை.

அறிமுகம் :- கடந்த 2014.10.10 ஆந் திகதியன்று சது/செந்நெல் ஸாஹிறா மகா வித்தியாலயத்தில் நடந்தேறிய கலை விழா தொடர்பான அறிக்கையை அதன் செயலாளர் என்ற வகையில் உங்கள் முன் சமர்ப்பிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

இடம் : சது/ செந்நெல் ஸாஹிறா மகா வித்தியாலய பிரதான மண்டபம்

காலம் : 2014.10.10 (வியாழக்கிழமை)

நேரம்: மு.ப 10.30 - பி.ப 2.30 வரை.

ஏற்கனவே திட்டமிட்டவாறு மு.ப 10.30 மணிக்கே நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. பிரதம அதிதியாக வருகை தந்த கலாநிதி மு. நல்லரெத்தினம் அவர்கள் பாடசாலை அதிபர்இ ஆசிரியர்கள்இ பெற்றோர்களால் மாலை அணிவிக்கப்பட்டு பிரதான மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டார். ஆரம்ப நிகழ்வாக கடவுள் வாழ்த்தோடு தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவத்தலைவன் செல்வன் என். வடிவேல் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பாடசாலை அதிபர் எஸ்.அபூபக்கர் அவர்களின் உரை அடுத்து இடம் பெற்றது. பிரதம அதிதியவர்களை வரவேற்றுப் பேசிய அவர் இவ்வாறான கலை நிகழ்ச்சிகளேஇ கடந்த வருட தமிழ்த் தினப்போட்டிகளில் மாகாண மட்டத்திலும்இ தேசிய மட்டத்திலும் பல வெற்றிகளைப் பெற்றுத்தரக் காரணமாக இருந்ததோடு அதற்கு எமது ஆசிரியர் குழாத்தின் அயராத முயற்சியே துணை நின்றது என்பதைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் மேடையேறின. தரம் 13ஐச் சேர்ந்த மாணவர்களால் மேடையேற்றப்பட்டஇ அரிச்சந்திர புராணத்தை அடிப்படையாகக் கொண்ட சத்திய சோதனை என்ற நாடகம் சபையோரைப் பெரிதும் கவர்ந்தது.

கடந்த வருடம் அகில இலங்கை தமிழ் மொழித்தின பேச்சுப் போட்டியில் தேசிய மட்டத்தில் பிரிவு நான்கில் முதலிடம் பெற்ற செல்வி. ஸைனப் ஸஹா நிகழ்த்திய 'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்ற மகுடத்திலமைந்த உரை அனைவர் உள்ளத்திலும் தாய் மொழிப் பற்றை ஊற்றெடுக்கச் செய்தது. அடுத்து 'காத்தவராயன் நாட்டுக்கூத்துஇ அசத்தப்போவது யாருஇ நுளம்புகள் கவனம் நோய் வந்தால் மரணம் (நாட்டிய நாடகம்)' ஆகிய நிகழ்ச்சிகள் முறையே அரங்கேற்றப்பட்டன.

பி.ப. 1.30 மணியளவில் பிரதம அதிதியின் உரை இடம்பெற்றது. அதில் அவர் கடந்த சில வருடங்களாக இப்பிரதேசத்தில் புகழ் வாய்ந்த ஒரு பாடசாலையாக வருடா வருடம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கின்ற ஒரு பாடசாலையாக இது மிளிரக் காரணம் இங்குள்ள அதிபர்இ அதிபர்இ ஆசிரியர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகளது அயராத முயற்சியும் ஒத்துழைப்பும் ஆகும் எனக்கூறினார். மேலும் க.பொ.த (சா.த) பரீட்சையிலும்இ உயர் தரப் பரீட்சையிலும் மாவட்ட மட்டத்தில் பிரகாசித்த மாணவர்களுக்கும் ஏனைய போட்டி நிகழ்ச்சிகளில் மாகாணஇ தேசிய மட்டத்தில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் தனது சொந்த நிதியிலிருந்து பரிசில்களை அள்ளி வழங்கினார்.

இறுதியாக பிரதி அதிபர் மு. அப்துல்லாஹ் அவர்களின் நன்றியுரையோடு பி.ப. 2.30 மணியளவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவெய்தின.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement